Monday, July 23, 2018

சின்னஞ்சிறு பெண் போலே...


சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)



இராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி
இயற்றியவர்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

7 comments:

  1. சீர்காழி கோவிந்தராசன் குரலில் மிக அருமையான பாடல்
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    ReplyDelete
  2. சாகா வரம் பெற்ற பாடல்கள்

    ReplyDelete
  3. செவிக்கினிய தமிழ் பாடல்

    ReplyDelete
  4. சீர்காழி ஐயா கணீர் குரல் ஒலிப்பு
    சிறப்பான தமிழ் உச்சரிப்பு

    ReplyDelete
  5. அன்றும் இன்றும் என்றும் என் விருப்ப பக்தி பாடல்

    ReplyDelete