கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அஆஆ.. மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
Movie | Deivam | Music | Kunnakudi Vaidyanathan |
---|---|---|---|
Year | 1972 | Lyrics | Kannadasan |
Singers | Madurai Somu |
காலம் கடந்து என்றும் நினைவில் நிற்கும் பாடல்
ReplyDeleteஇனி எவராலும் இந்த வரிகளைப் போல் இயற்ற முடியாது, தமிழ் கடவுளுக்கே உண்டான முத்தான வரிகள், வாழ்க கண்ணதாசன் புகழ்.....
ReplyDeleteBalakrishnan artist singer
ReplyDeleteகண்ணதாசன் இதில் முருகப்பெருமானின் பாடுகிறார் மேலும் சினிமாவில் பிரபலமாக இருந்த தேவர் ஐயா அவர்களையும் போற்றி பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது. கண்ணதாசன் ஐயா அவர்களின் கற்பனைக்கு தங்க கிரீடமும் வைர கிரீடமும் அமைந்திருக்க வேண்டும். கண்ணதாசன் சிலையை ஆவது பத்து லட்சத்திலாவது நி
ReplyDeleteநிறுவலாம், என்பது கோடி பேனாக்களில் செலவு வாரி இறைப்பது கண்ணதாசனுக்கே பிடிக்காது.
👍👍👍
Deletehttps://youtu.be/gDx01riOPg8
ReplyDeleteமருதமலை மாமணியே முருகையா பாடல் உருவான விவரத்தை இந்த காணொளியில் காணலாம் லிங்க் மேலே வழங்கப்பட்டுள்ளது அவற்றைக் காண தவறி விடாதீர்கள் மிக மிக அருமையான பதிவு.
என்றும்,மறக்காத வரிகள், குரல், இசை...
ReplyDeleteகவிஞர் கண்ணதாசன் 👍
Evergreen devotional song written by Kavingar Kannadasan
ReplyDeleteபாடலை கேட்கும் போது முருகப் பெருமானே கண்முன் தோன்றுகிறார்.
ReplyDelete