விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்
கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்
[புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்
எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே
தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே
இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே
தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே
[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்
[விண்வரும்.....]
எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே
உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே
காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்
இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்
[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்
[விண்வரும்.....]
உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்
உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்
தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்
வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்
[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்
Showing posts with label தாயக பாடல்கள். Show all posts
Showing posts with label தாயக பாடல்கள். Show all posts
Sunday, February 16, 2020
Wednesday, July 4, 2018
வீரன் மண்ணில் புதையும் போது....
வீரன் மண்ணில் புதையும் போது
விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க
ஆயிரம் தோற்றுவிப்பான்
புலிகளை சாய்த்தாலும்
ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் .....
வீரன் மண்ணில் புதையும் போது....
புலிகளை சாய்த்தாலும் .....
புலிகளை சாய்த்தாலும் .....
தாயின் மடியில் ஆடும் கால்கள்
துள்ளி ஓடி வரும்
பூவின் திறல்கள் புதிரை மீட்ட
பயணம் தொடர்ந்து விடும்.
தாயின் மடியில் ஆடும் கால்கள் .....
ஏந்திடும் துவக்கு வீழ்ந்திடும்
முன்னே புது கரங்கள் அதை ஏற்க்கும்.
வீரன் மண்ணில் புதையும் போது
விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க
ஆயிரம் தோற்றுவிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
தியாக செந்நீர்
கீறிடும் மழையில்
சூளும் தீ அவியும்
பாவம் மக்கள்
வாழ்வை மாற்றும்
பாதை தெரிய வரும்.
தியாக செந்நீர் கீறிடும் மழையில்....
ஆதவன் வரவை அறிந்தன் பின்பே
வின் மீன்கள் துயில் கொள்ளும்
வீரன் மண்ணில் புதையும் போது
விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க
ஆயிரம் தோற்றுவிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
கரும்புலிகள் என நாங்கள்..
கரும்புலிகள் என நாங்கள்
மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம்
கலங்கிடும் வெல்வோம்!
கரும்புலிகள் என நாங்கள் .....
கடலினில் சிங்கள
படகினை உடைப்போம்
தரையினில் எதிரியின்
பாசறை முடிப்போம்..
கரும்புலிகள் என நாங்கள் .....
அம்மாவும் அப்பாவும்
எங்களுக்கு உண்டு
ஆனாலும் மண் மீது
பெரும் பாசம் உண்டு
ஆறடி மண் கூட
எமக்காக கேளோம்!
தமிழ் தாயின் துயர் தீர்க்க
மகிழ்வோடு சாவோம்!
கரும்புலிகள் என நாங்கள் .....
சாவினை தோள்மீது
நாங்கள் சுமப்போம்
சாவுக்கும் அஞ்சாமல்
சாவுக்குள் வாழ்வோம்
தமிழரின் சாவுகள்
வரலாறு படைக்கும்
தமிழீழ தாய் அவள்
விலங்குகள் உடைக்கும்
கரும்புலிகள் என நாங்கள் .....
ஊர் அதில் வெடி ஓசை
வான் வரை கேக்கும்
உலகத்தின் திசை எங்கும்
எம் செய்தி தாக்கும்
காற்றாக்கி எம்முடல்
நீர் ஆக்கி கரையும்
தமிழர் தம் உனர்வோடு
எம் உயிர் கலக்கும்
கரும்புலிகள் என நாங்கள் .....
கடலினில் சிங்கள
படகினை உடைப்போம்
தரையினில் எதிரியின்
பாசறை முடிப்போம்..
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது...
காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது -இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
வாழும்போது மானத்தோடு வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா -(2)
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா
வாசலில் அடிமை சேகவம் செய்து வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா -(2)
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா
காற்றும்நிலவும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை -நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில் புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில் -(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்
போகும் திசையில் சாகும்வரையில் புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில் -(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்
Thursday, June 14, 2018
தளராத துணிவோடு...
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ இந்தி
அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது
தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது
தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்
தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது )
கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது )
இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது
உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
சிங்களத்துப் படைகளோடு போராடினாய் )
வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் )
பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் )
இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் )
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ
இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே....
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே
அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே
மன்னவரை பாடுதற்கு இந்த ஜென்மம் போதவில்லை
கல்லறையில் போடுதற்கு கோடி மலர் பூக்கவில்லை கோடி மலர் பூக்கவில்லை
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே
அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே
கோயில் மணி ஓசையிட தேகம் மெல்ல உயிர் பெறும்
ஆறு மணியானவுடன் வாசல் மெல்ல திறந்திடும்
கல்லறை தெய்வங்கள் கண்ணெதிரே வந்து என்னென்னவோ கதைப்பார்கள்
அந்த புன்னிய நேரத்தில் வண்ணங்கள் ஆயிரம் மின்னிடவே சிரிப்பார்கள்
இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்
யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்
காற்றெழுந்து வீசிடவே கண்ணெதிரே வந்தெழுவார்
காத்திருப்போர் காதுகளில் வார்த்தை ஒன்று பேசிடுவார்
தீபங்கள் ஏற்றிடும் தோழர்களை பார்த்து தாகத்துக்கும் பதில் கேட்பார்கள்
வண்ண பூவுடனே வரும் தோழியரை பார்த்து தேசத்துக்கும் வழி கேட்ப்பார்கள்
இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்
யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்
ஓ மரனித்த வீரனே.....
ஓ மரனித்த வீரனே
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு...
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
வார்த்தைகள் போதவில்லை வரலாறு பாடுமுன்னே.
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா!
மாவீரர் யாரோ என்றால்...
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!
தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!
தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!
ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!
ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!
ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!
மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி
வதம் செய்யும் ஆட்சி தன்னை..
உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால்
சினந்திடும் வீரவான்கள்..
உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால்
சினந்திடும் வீரவான்கள்....
சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்!
துணிந்தெழும் ஞானவான்கள்!
(மாவீரர்....)
தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்
வீசிய இளம் தென்றல்கள்!
விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்
விடுதலை ஆண்பெண் பொன்கள்!
தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்
வீசிய இளம் தென்றல்கள்!
விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்
விடுதலை ஆண்பெண் பொன்கள்!
பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்!
பலமாகி நிற்கும் தூண்கள்!
Subscribe to:
Posts (Atom)