தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
படம் : அவள் ஒரு தொடர்கதை (1978)
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : KJ யேசுதாஸ்
வரிகள் : கண்ணதாசன்
Perfectly fine
ReplyDeletenihilist
ReplyDeletePalakrishnanartistsinger
ReplyDeleteகாற்றுக்கேது தோட்டக்காரன் அல்ல, காட்டுக்கு ஏது தோட்டக்காரன். பிழை திருத்தம்
ReplyDeleteமண்ணை தோன்றி அல்ல.
ReplyDeleteமண்ணை தோண்டி கண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி என்னை தோண்டி ஞானம் கண்டேன்,...
இறந்தவர்களை நினைத்து அழுபவர்களை குறிப்பிடுகிறார் கவிஞர்.
பொறுப்பு இல்லாத சோம்பேறி குடும்பத்தை பேணாதவன் ஆனால் சாப்பாடு மட்டும் ஜன்னல் வழியாக கேட்டு தின்னும் பயல் பாடும் பாட்டு இது படத்தில். பாவம் ஜேசுதாஸ் இன்னொரு மொடாகுடிகாரன் எழுதிய பாட்டை பாடினார்.
ReplyDeleteStupidity
ReplyDelete