Saturday, July 25, 2020

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்...

நல்லூர் பாடல்கள் புதுவை

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்.

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு.

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

Thursday, July 2, 2020



மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே


தாமரை மேலே நீர் துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்கை தான் என்ன சொல்


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே


மேடையை போலே வாழ்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஒடையை போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடுதான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா....


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

படம் : மௌன ராகம்இசை : இளையராஜாபாடலாசிரியர்: வாலிபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Sunday, February 16, 2020

விண்வரும் மேகங்கள் பாடும்....

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்
கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்
[புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்
எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே
தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே
இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே
தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே
உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே
காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்
இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்
உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்
தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்
வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்