Showing posts with label அம்மாவின் அருமை. Show all posts
Showing posts with label அம்மாவின் அருமை. Show all posts

Wednesday, March 16, 2022

தாயில்லாமல் நானில்லை...

  

பாடியவர் : டி.எம் .எஸ்

திரைப்படம் :அடிமைப்பெண்

பாடல் வரிகள்: கவிஞர் ஆலங்குடி சோமு


தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்


ஜீவநதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

தவறினைப் பொறுப்பாள்

தர்மத்தை வளர்ப்பாள்

தரணியிலே வளம் சேர்த்திடுவாள்

தாயில்லாமல் நானில்லை


தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்


தாயில்லாமல் நானில்லை


மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்

மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்

தாயில்லாமல் நானில்லை


ஆதி அந்தமும் அவள்தான்

நம்மை ஆளும் நீதியும் அவள்தான்


அகந்தையை அழிப்பாள்

ஆற்றல் கொடுப்பாள்

அவள்தான் அன்னை மகா சக்தி

அந்த தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

என்க்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

படம் : மன்னன் (1992)

பாடல் வரிகள்: கவி. வாலி

இசை: ராக தேவன் இளையராஜா

இயக்குனர் : பி.வாசு


அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே (2)

நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி

வேறொன்று ஏது ?….

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே


அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி

திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா

அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்

புரிகின்ற சிறு தொண்டன் நான் தானம்மா

பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்

அருள் வேண்டும் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே

அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்

மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே

அதை நீயே தருவாயே


அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே


பசுந்தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்

அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா ?

விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாய் அன்பு கிடைக்காதம்மா ?

ஈரைந்து மாதங்கள் கருவோடு எனை தாங்கி நீ பட்ட

பெரும்பாடு அறிவேன்னம்மா …

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் முளைத்தாலும்

உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா ?

உன்னாலே பிறந்தேனே …


அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி

வேறொன்று ஏது ?….

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே..

 படம்: தென்மேற்குப் பருவக்காற்று

பாடலாசிரியர்: வைரமுத்து

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

பாடியவர்: விஜய் பிரகாஷ்


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே

முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே

என்ன முள்ளு தைக்க விடல நீயே


காடைக்கும் காட்டு குருவிக்கும்

எந்த புதரிலும் இடமுண்டு...

கொடைக்கும் அடிக்கும் குளிருக்கும்

தாயி ஒதுங்கதான் இடமுண்டா.


கரட்டு மேட்டையே  மாத்துனா அவ

கல்ல புழிஞ்சி கஞ்சி ஊத்துனா  (2)


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே

முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே

என்ன முள்ளு தைக்க விடல நீயே


உளவு காட்டுல வெத  வெதப்பா

ஒணாகரட்டுல  கூல் குடிப்பா

வாரன்-குழாயில் கை துடைப்பா

பாவமப்பா  .....


வெளி முள்ளில் அவ விறகெடுப்பா

நாழி அரிசி வச்சு ஒலை அரிப்பா

புள்ள உண்ட மிச்சம் உண்டு

உசுர்  வளர்ப்பா தியாகமப்பா  ...


கிழக்கு விடியும் முன்ன முளிக்குரா

அவ உலக்கை  பிடிச்சுதான் தேறக்குறா

மண்ண கிண்டிதான் பொழைக்குறா

உடல் மைக்கைபோக  மட்டும் உழைக்குறா


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே


தங்கம் தனி தங்கம் மாசு-இல்ல

தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல

தாய்வழி சொந்தம் போல பாசமில்ல

நேசமில்ல


தாயி கையில் என்ன மந்திரமா

கேப்பைக்கழியில் ஒரு நெய் ஒழுகும்

காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்

அவ சமைக்கயில ..


சொந்தம் நூறு சொந்தம் இருக்குது

பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா

சாமி நூறு சாமி இருக்குது

தாயி ரெண்டு தாயி இருக்குதா


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே