Monday, July 23, 2018

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...



புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்

ஆல்பம் : கிருஷ்ணகானம்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்

5 comments:

  1. காலத்தால் அழியாத பாடல் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்த பாடல் அருமை கண்ணதாசன் மற்றும் தொடர்புடைய நபர்கள் குலம் தழைத்து ஓங்க நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Lyrics are fantastic

    ReplyDelete
  3. Great effort! Long live!

    ReplyDelete
  4. பாடலை. இளையராஜா பாடி கேட்டுப் பாருங்கள்.

    ReplyDelete