Monday, July 23, 2018

திருச்செந்தூரின் கடலோரத்தில்....

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா

வருவாய் அருள் தருவாய் முருகா

MovieDeivamMusicKunnakudi Vaidyanathan
Year1972LyricsKannadasan
SingersSeerkazhi Govindarajan, T. M. Soundararajan

1 comment:

  1. மிகவும் அருமையான பாடல் திருச்செந்தூரின் கடலோரத்தில் இந்த பாடலை நான் பாடுகிறேன் மிகவும் அருமையாக உள்ளது சரணம்

    ReplyDelete