Tuesday, July 17, 2018

உச்சி வகுந்தெடுத்து ....

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ

பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க

வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க

ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
னானானனானானானா ஏ

பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

3 comments:

  1. சங்கரய்யா இல்லை அது செங்கரையான்

    ReplyDelete
  2. பாடலை எழுதியது யார்?

    ReplyDelete
  3. சவ்குமார் நடித்த படம்

    ReplyDelete