பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
(பாட்டும்)
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆலவாயனொடு ஆடவந்ததொரு
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
(பாட்டும்)---------------------------------
படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)
பாடியவர்: T.M.செளந்தரராஜன்
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: K.V. மகாதேவன்
---------------------------------
ஆலவாயனொடு பாடவந்தவனின்
ReplyDeleteபாடும் வாயை இனி மூடவந்ததொரு
மிகச் சரி...
Deleteஅருமை
Deleteபாடல் கவிஞர் கா மு ஷெரீப்
ReplyDeleteஉண்மை
DeleteYes
Deleteதிரு. அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலை எழுதியது தனது தந்தை தான் என்று திரு. கண்ணதாசன் அவர்கள் ஒரு நாளிதழில் சொன்னதை தனது கண்ணதாசன் ப்ரொடக்சன்ஸ் யூ டூப் சானலில் குறிப்பிட்டுள்ளார்.
Deleteசந்தேகத்திற்கு இடமின்றி இது கண்ணதாசன் எழுதிய பாடல்
Deleteரசிக்க தவரினேன் ....அன்று
ReplyDeleteபாடல் கவிஞர் கா மு ஷெரீப்
ReplyDeleteதவறு...
Deleteகவியரசு கண்ணதாசன்தான்.
பாலா பாலகிருஷ்ணன் பாடல் நானும் பாடுவேன்
ReplyDeleteஇருவரின் வரிகளும் சேர்ந்து அமைந்தது தான் இந்தப் பாடல்
ReplyDelete