Tuesday, July 17, 2018

குடகு மலை காற்றில் வரும் ...


குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிகிது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தேமாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன்
பூ பூத சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு
பாடும் பாட்டு
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி

மறந்தால் தானே நெனைகனும் மாமா
நினைவே நீதானே நீ தன்னே
மனசும் மனசும் இணைந்ஜது மாமா
நெனச்சு தவிசேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தேக்கு காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒன்னாக நின்ன என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி துடிசாளே இந்த கன்னி
வா மாமா


MovieKarakattakaranMusicIlaiyaraaja
Year1989LyricsGangai Amaran
SingersK. S. Chithra, Mano

No comments:

Post a Comment