Monday, July 23, 2018

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா...



ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று
நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா
உனக்குச் சாருமொரு பிழையில்லையே
ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்
தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட
சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
தண்டபாணித் தெய்வமே

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ

-------------------------------------------------

திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)
பாடியவர்: K.B. சுந்தராம்பாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்

-------------------------------------------------

2 comments:

  1. திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலை இயற்றியது தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள்.. மற்றபடி இந்த திரைப்படத்தின் மற்ற அனைத்து பாடல்களும் கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது.. - svs Sangu

    ReplyDelete
    Replies
    1. பழம் நீயப்பா என்னும் பாடலை எழுதியவர் கண்ணதாசனே. ஞானப்பழததைப் பிழிந்து என்பதுதான சுவாமிகள் எழுதியது.

      Delete