சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)
மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)
இராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி
இயற்றியவர்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
ஆல்பம் : கிருஷ்ணகானம்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா பிரித்த கதை சொல்லவா கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை அஆஆ.. மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ… கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா? கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் முருகா
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை - இறைவா
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று
நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா
உனக்குச் சாருமொரு பிழையில்லையே
ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?
ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்
தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட
சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
தண்டபாணித் தெய்வமே
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
(பாட்டும்)
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
சட்டி சுட்டதடா கை விட்டதடா சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா (சட்டி …)
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா (சட்டி …)
ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா (சட்டி …)
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா (சட்டி …)
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
யாரார்க்கு என்ன வேஷமோ
இங்கே யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டால தான்
ஊர்போவது நாளால தான்
கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மாDate, workOrderNumber, controller);
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே
ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கே இல்லை அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி... அடி நீ சொன்ன பேச்சு நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி பெண் : மானோ தவிச்சு வாடுது மனசுல நினைச்சு வாடுது எனக்கோ ஆசை இருக்குது ஆனா நிலைமை தடுக்குது உன்னை மறக்க முடியுமா உயிர வெறுக்க முடியுமா ராசாவே...காற்றில் ஆடும் தீபம் போல துடிக்கும் மனச அறிவாயோ
ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை (இசை)
பெண் : ஆரிராராரோ... ஆரி ராராரோ... ஆரிராராரோ... ஆரிராராரோ... ஆராரோ...ஆராரோ
ஆண் : எனக்கும் உன்னை புரியுது உள்ளம் நல்லா தெரியுது அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது ஒன்னை மறக்க முடியல உயிர வெறுக்க முடியல ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும் காலம் இனிமே வாராதோ
பெண் : இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போட இருப்போம் அது கண்டாலம் போச்சுதுன்னா என் ராசாவே... நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன் என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்
ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை