பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆகா கா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.
(பூங்கதவே தாள்)
திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.
(பூங்கதவே தாள்)
மலரும் நினைவுகள்
ReplyDeleteRishi
ReplyDelete