படம்: தென்மேற்குப் பருவக்காற்று
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: என்.ஆர்.ரகுநந்தன்
பாடியவர்: விஜய் பிரகாஷ்
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சி வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு...
கொடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்கதான் இடமுண்டா.
கரட்டு மேட்டையே மாத்துனா அவ
கல்ல புழிஞ்சி கஞ்சி ஊத்துனா (2)
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சி வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
உளவு காட்டுல வெத வெதப்பா
ஒணாகரட்டுல கூல் குடிப்பா
வாரன்-குழாயில் கை துடைப்பா
பாவமப்பா .....
வெளி முள்ளில் அவ விறகெடுப்பா
நாழி அரிசி வச்சு ஒலை அரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு
உசுர் வளர்ப்பா தியாகமப்பா ...
கிழக்கு விடியும் முன்ன முளிக்குரா
அவ உலக்கை பிடிச்சுதான் தேறக்குறா
மண்ண கிண்டிதான் பொழைக்குறா
உடல் மைக்கைபோக மட்டும் உழைக்குறா
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சி வளர்த்த நீயே
தங்கம் தனி தங்கம் மாசு-இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில்ல
நேசமில்ல
தாயி கையில் என்ன மந்திரமா
கேப்பைக்கழியில் ஒரு நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்
அவ சமைக்கயில ..
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது
தாயி ரெண்டு தாயி இருக்குதா
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சி வளர்த்த நீயே
No comments:
Post a Comment