பாடல்: வழி நெடுக காட்டுமல்லி
இசை: இசைஞானி இளையராஜா
எழுதியவர்: இசைஞானி இளையராஜா
பாடியவர்: இசைஞானி இளையராஜா , அனன்யா பாட்
வழி நெடுக காட்டுமல்லி
காலத்தால் அழியாத தமிழ்ப்பாடல் வரிகள்.
வழி நெடுக காட்டுமல்லி
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதாது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி
அன்பான துணைவி
அடைந்தாலே பேரின்பமே..
மடிமீது துயில
சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே..
நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை
பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே …
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன்
பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும்
நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம்
பொங்கிவரும்போதும்
மக்கள் மனம்போலே
பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான் …
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
---
அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாசையில படிப்பது பாவமில்ல
என்னமோ ராகம் என்னன்னமோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
எல்லாமே சங்கீதந்தான்...ஆஆஆ...
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான்
---
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
---
கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும் அதுக்கு உம் பாட்டப் படி
என்னயே பாரு எத்தன பேரு
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ...
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா
----
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
--
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
---
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
--
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
---
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
---
மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
---
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்படம் : சின்ன தம்பி
பாடல் : போவோமா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், சுவர்ணலதா
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
—
அரமண அன்னக்கிளி தரையில நடப்பது நடுக்குமா அடுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ளசுகம் அரண்மண கொடுக்குமா
குளுகுளு அரையிலே கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்து குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
—
கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடு
நதியிலே
உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போறேன் நிப்பாட்டு
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
படம் : தேவர் மகன்
பாடல் : போற்றிப் பாடடி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.பி.பால சுப்ரமணியம்
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
—
என்ன சொல்ல மண்ணு வளம்….
டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…
மாத்தவங்க கண்ணு படும்
டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…
என்ன சொல்ல மண்ணு வளம்
மாத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்
நம் உயிர்க்கு மேல மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே
பெரிசல்லாம் சொன்னாங்க சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க
—-
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
முன்னோருக்கு முன்னோரெல்லாம்…..
டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…
இன்னாருன்னு கண்டு கொள்ள
டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒன்னு ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர் கல்யாணந்தேன்
முத்து முத்து கம்பளந்தேன்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காலந்தேன்
அழகான சரிஜோடி ஆணைமேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்
—
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
படம் : தளபதி
பாடல் : காட்டுக்குயிலு
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோச தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்
—
போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்பப் பொறந்தோமுன்னு என்னிக்கொள்ளடா டோய்
பயணம் எங்கே போனாலென்ன பாதை நூறு ஆனாலென்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்
ஊதக் காத்து வீச ஒடம்புக்குள்ள கூச
குப்ப கூளம் பத்தவச்சுக் காயலாம்
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப் பான வெல்லம் போலப் பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிர நாள்தான் ஹோய்
—
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோச தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்
—
பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலப்பட்ட ஜென்மம் நானில்ல
பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூடக் கற்பைப் போல என்னுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டுத் தாளம் இட்டுப்
பாட்டுப் பாடும் வானம்பாடி நான் தான் ஹோய்
—
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோச தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்
படம் : காதலுக்கு மரியாதை
பாடல் : என்னை தாலாட்ட
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர்கள் : ஹரிஹரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்
எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
படம் : கடலோரகவிதைகள்
பாடல் : அடி ஆத்தாடி.
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பங்காரா
பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடி ஆத்தாடி…
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அதுதானா
உயிரோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி
—
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல
புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல
மூக்கு நுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ …
—
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்
உண்ம சொல்லு பொன்னே என்னை, என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே …
—
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அதுதானா
உயிரோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி ஆத்தாடி.....