படம் : ஒரு தலை ராகம்
பாடல் : வாசமில்லா மலரிது
இசை : டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
--
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
---
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
--
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
---
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
---
மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
---
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
No comments:
Post a Comment